கல்லூரி மற்றும் அலுவலகங்களில் இருக்கும் இன்டர்நெட்-ஐ எமது போனில் USB கேபள் மூலம் இலவசமாக பயன்படுத்துவது எப்படி? | VETRI TECH NEWS VETRI TECH NEWS: கல்லூரி மற்றும் அலுவலகங்களில் இருக்கும் இன்டர்நெட்-ஐ எமது போனில் USB கேபள் மூலம் இலவசமாக பயன்படுத்துவது எப்படி?
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

Search This Blog

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

Monday, 4 April 2016

கல்லூரி மற்றும் அலுவலகங்களில் இருக்கும் இன்டர்நெட்-ஐ எமது போனில் USB கேபள் மூலம் இலவசமாக பயன்படுத்துவது எப்படி?

ஸ்மார்ட் போன் மூலம் இலவசமாக இன்டர்நெட் பயன்படுத்துவது எப்படி என்று எம்மை பலபேர் கேட்டு கொண்டதால், இன்று உங்களது கல்லூரி மற்றும் அலுவலகத்தில் இருக்கும் இன்டர்நெட் இணைப்பை உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் எப்படி இலவசமாக பயன்படுத்தி கொள்வது என்பது பற்றி சொல்லித்தருகிறேன்.

இந்த உபாயத்தில் பல்வேறு படிமுறைகள் இருக்கின்றது. அனைத்தையும் சரியாக செய்து முடித்தால், உங்களது ஆன்ராயிடு போனில் இருந்து இலவசமாக இன்டர்நெட்-ஐ உபயோகிக்கலாம். ஆகவே அனைத்து படிமுறைகளையும் சரியாக பின்பற்றுங்கள்.

இன்று நாம் பார்க்கவிருப்பது, எமது அலுவலக, கல்லூரி அல்லது வேறு ஏதேனும் ஒரு கணனியில் இருக்கும் இன்டர்நெட் இணைப்பை எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனுக்கு USB கேபள் மூலம் ஷேர் செய்து இன்டர்நெட் உபயோகிப்பது எப்படி என்பதாகும்.




இந்த உபாயத்தை உங்களது போனில் செயற்படுத்த வேண்டும் என்றால், உங்களது போன் கட்டாயமாக ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆன்ராயிடு ரூட் செய்வது எப்படி என்ற சிறப்பு பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி?


முதலாவதாக உங்களது போனை USB கேபள் மூலம் குறித்த கணனியுடன் இணையுங்கள்.

அடுத்து உங்களது ஆன்ராயிடு போனில் டிவலபர் வசதியை செயட்படுத்துங்கள்.

இதை செயற்படுத்த, உங்களது ஆன்ராயிடு போனில் செட்டிங்க்ஸ்-இற்கு சென்று, About Device என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.

அதிலே Build Number என்று இருப்பதை 7-11 தடவை கிளிக் செய்து டிவலபர் வசதியை செயட்படுத்துங்கள்.






இப்போது உங்களது போன் செட்டிங்க்ஸ்-இல் புதிதாக டிவலபர் என்ற மெனு ஒன்று காணப்படும்.
அதை திறந்து, USB Debugging எனும் வசதியை செயட்படுத்துங்கள். இதை செயற்படுத்தும் போது கீழ் காட்டப்பட்டுள்ளவாறு ஒரு வாசகம் தோன்றும். அதை OK செய்து விடுங்கள்.



அடுத்து கீழே வழங்கப்பட்டிருக்கும் இன்டர்நெட்-ஐ ஷேர் செய்யும் மென்பொருளை உங்களது கணனிக்கு பெற்றுக் கொள்ளுங்கள்.
இந்த மென்பொருள் (rar) ஆக இருக்கும். அதை 'எக்ஸ்ரேக்ட்' செய்து, அதிலே 'ஆன்ராயிடு டூல்' என்று இருக்கும் பைல்-ஐ ஆரம்பியுங்கள்.

அதிலே டிவைஸ்-ஐ தெரிவு செய்தும் மெனு-வில் உங்களது போன் காட்டப்படுகிறதா என்று பாருங்கள். அங்கே உங்களது போன் காட்டப்படவில்லை என்றால், Refresh என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது உங்களது போன் காட்டப்படும். அடுத்து, Connect என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.

கிளிக் செய்ததும், உங்களது போனில் ரூட் அனுமதியை கேட்கும். அதை அனுமதியுங்கள்.
அடுத்த நொடியே உங்களது போனுக்கு இன்டர்நெட் இணைப்பை வழங்குவதற்கான செயன்முறை நடைபெறும்.

ஒரு சில வினாடிகளில் உங்களது போனுக்கு இன்டர்நெட் இணைப்பு கிடைத்து விடும். இதை உறுதி செய்ய உங்களது போனில் மேலே இடது மூலையில் கீழ் காட்டியுள்ளவாறு நோடிபிகேசன் ஒன்று காட்டப்படும்.


ஆகவே இப்போது உங்களது போனுக்கு கணனியில் இருக்கும் இன்டர்நெட் கிடைத்து விட்டது. இப்போது உங்களது போனில் மொபைல் டேட்டாவை Off செய்து விட்டு, இன்டர்நெட்-ஐ பயன்படுத்தி பாருங்கள்.

முதலாவதாக இன்டர்நெட்-ஐ பயன்படுத்தும் போது, கீழ் காட்டியுள்ளவாறு "உங்களது போனில் இன்டர்நெட் இல்லை. மொபைல் டேட்டா-வை On
செய்யுங்கள். அல்லது வைபை இணைப்பை பயன்படுத்துங்கள்" என்ற வாசகம் தோன்றும்.

அதை OK செய்து விடுங்கள். இவ்வாறான வாசகம் தோன்றினாலும் கட்டாயமாக உங்களது போனில் இருந்து இன்டர்நெட் பயன்படுத்த கூடியதாய் இருக்கும். மேலும் இந்த எரர் வாசகம் ஒவ்வொரு முறை நீங்கள் இன்டர்நெட்-ஐ பயன்படுத்தும் போதும் தோன்றும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

இதோ, எனது போனில் மொபைல் டேட்டா அல்லது வைபை எதுவுமே இல்லாத சந்தர்ப்பத்திலும் இன்டர்நெட் இணைந்து இருப்பதை கீழே காணலாம்.


இந்த முறை மூலம், மிக இலகுவாக குறித்த கணணி ஒன்றில் இருக்கும் இன்டர்நெட்-ஐ எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனுக்கு USB கேபள் மூலமான பகிர்ந்து கொள்ள முடியும்.

ஆகவே உங்களது ஆன்ராயிடு போனுக்கு கணணி ஒன்றில் இருக்கும் இன்டர்நெட் இணைப்பை USB கேபள் மூலம் பகிர்ந்து கொள்ள உதவும் மென்பொருளை இலவசமாக தரவிறக்குவது எப்படி என்று பார்ப்போம்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology
Like the Post? Share with your Friends:-

Team SB
Posted By: Team SB

0 comments :

POST A COMMENT

Contact Us

Name

Email *

Message *

 

vetrivlnews

Latest post

Google+ Badge

Vetri Vel . Powered by Blogger.

Google+ Followers

Blog Archive

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

vetri vl+

About Us

Recent Comment

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl